ECONOMY

தீர்மானங்களை புதுப்பித்துக் கொள்வீர்-இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சுல்தான் வலியுறுத்து

30 ஜூலை 2022, 4:51 AM
தீர்மானங்களை புதுப்பித்துக் கொள்வீர்-இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சுல்தான் வலியுறுத்து

ஷா ஆலம், ஜூலை 30 - அதிகரித்து வரும்  உலக சவால்களை எதிர்கொண்டு இன்னும் ஆக்கப்பூர்வமாகவும் புதுமையாகவும் மாறுவதற்கு முஸ்லிம்கள் தங்கள் தீர்மானங்களை புதுப்பிக்குமாறு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்  அழைப்பு விடுத்துள்ளார்.

நோய்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள முஸ்லிம்களும் தயாராக வேண்டும் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

சமூகம் தொடர்ந்து இயல்பாக வாழ்வதற்கும் அவர்களின் நலன் காக்கப்படுவதற்கும் இது அவசியமானது என்று சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட  இஸ்லாமியப் புத்தாண்டு 1 முஹர்ரம் 1444 ஹிஜ்ரா வாழ்த்துச்  செய்தியில் அவர்  குறிப்பிட்டார்.

குடும்பம், துறை, சமூகம் அல்லது நாடு என தனித்தனியாக இருந்தாலும் மாற்றத்தின் உணர்வை வளர்ப்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்கும்  புத்தாண்டு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்று சுல்தான் ஷராபுடின் கூறினார்.

முஸ்லீம்கள் அனைத்து கெட்ட குணங்களையும் (மஸ்முமா) எதிர்மறையையும் விட்டுவிட்டு அவற்றை பாராட்டத்தக்க மற்றும் நேர்மறையான குணங்களாக மாற்றுவதற்குரிய வாய்ப்பினை ஹிஜ்ரா வழங்குகிறது என்று சுல்தான் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இழிவான மற்றும் ஒழுக்கக்கேடான செயல்களை கைவிட்டு அதற்கு பதிலாக நல்ல மற்றும் பக்தி மார்க்கமான செயல்கள் மற்றும் நடைமுறைகளுக்கு மாறுங்கள் என்று சுல்தான் தெரிவித்தார்.

முன்னதாக, சுல்தான் ஷராபுடின் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் தம்பதியர் நாடு முழுவதும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹிஜ்ரத் 1444 க்கான ஆசீர்வதிக்கப்பட்ட அவால் முஹர்ரம் (மால் ஹிஜ்ரா) வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.