ஷா ஆலம், ஜூலை 29- வரும் ஜூலை 31 ஆம் கோம்பாக்கில் நடைபெறும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் கலந்து கொள்வோருக்கு நிலுவையில் உள் நிலவரிக்கு 25 விழுக்காடு வரை கழிவைப் பெறுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படும்.
பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் காலை நடைபெறும் இந்த நிகழ்வில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஏற்பாடு செய்யப்படும் நடமாடும் முகப்பிடங்களில் பொதுமக்கள் தங்கள் வரி பாக்கியைச் சரிபார்த்து செலுத்தலாம்.
காலை 8.00 மணி தொடங்கி மாலை 5.30 மணி வரை நீடிக்கும் இந்த ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் புதிய அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட பெடுலி ராக்யாட் திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கி வைப்பார்.
இதே போன்ற நிகழ்வு அம்பாங் ஜெயா தாமான் கோசாஸ், கோல லங்காட் டத்தாரான் பந்தாய் மோரிப், கோல சிலாங்கூர் அரங்கம், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற போலவார்ட் சதுக்கம் ஆகிய இடங்களில் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகமானோர் பயன்பெறும் வகையில் 35 கோடி வெள்ளி மதிப்பில் இந்த சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.


