ஷா ஆலம், ஜூலை 28: ஆகஸ்ட் 6 அன்று கோலா சிலாங்கூரில் நடக்கும் சிலாங்கூர் டிஜிட்டல் தொழில் முனைவோர் திட்டத்தில் மொத்தம் 200 ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு நிபுணர்களிடமிருந்து மின் வணிக வழிகாட்டுதலை இலவசமாக பெறும் வாய்ப்புள்ளது.
சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார கழகம் (சிடேக்) ஏற்பாடு செய்யும் திட்டத்தின் வழி ஆன்லைன் வணிகத்தைப் பற்றி கிராமப்புற வர்த்தகர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர், கோலா சிலாங்கூரைச் சுற்றியுள்ள தொழில்முனைவோருக்கு டிஜிட்டல் துறையில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறது.
"இந்த திட்டத்தில் சேர்ந்து ஆன்லைன் மூலம் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பும் 200 வர்த்தகர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக ‘’ இன்று பேஸ்புக்கில் தெரிவித்தார்.
ஹிஜ்ராவைத் தவிர, லாசாடா, ஷோப்பீ, டச்ன்கோ இ-வாலட், எக்ஸ்பிரஸ் மலேசியா, பிஜிமால், ஈஸிஸ்டோர், ஷாப்லைன் மற்றும் பேஹலால் உள்ளிட்ட இ-காமர்ஸ் துறை நிபுணர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்பர்.
தஞ்சோங் காராங்கில் உள்ள டேவான் டத்தோ ஹோர்மட்டில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த திட்டம் நடைபெற உள்ளது.
மேலும் தகவலுக்கு, ஆர்வமுள்ள வர்த்தகர்கள் www.sidec.com.my/kejahalusahawandigitalselangor/ ஐப் பார்வையிடலாம்.


