ECONOMY

அறக்கட்டளை கணக்குகளை திருத்துவதற்கான தீர்மானம்- சட்டமன்றத்தில் மந்திரி புசார் தாக்கல்

26 ஜூலை 2022, 3:55 AM
அறக்கட்டளை கணக்குகளை திருத்துவதற்கான தீர்மானம்- சட்டமன்றத்தில் மந்திரி புசார் தாக்கல்

ஷா ஆலம், ஜூலை 26- பன்னிரண்டு அறக்கட்டளை கணக்குகளில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான தீர்மானத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று மாநில சட்டத்தில் தாக்கல் செய்தார்.

மக்களுக்கான உதவித் திட்டங்களை அமல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

கட்டுப்படி விலை வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுக்கான கட்டுமான உதவி, பொருளாதார மீட்சித் தொகுப்புகள், பேரிடர் நிதி மற்றும் தற்போது இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் என பெயரிடப்பட்டுள்ள பெடுலி ராக்யாட் திட்டங்கள் ஆகியவை அந்த 12 கணக்குகளில் அடங்கும்.

மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக 1957 ஆம் ஆண்டு நிதி வழிமுறைச் சட்டத்தின் 10வது பிரிவுக்கேற்ப குறிப்பிட்ட தொகையை அறக்கட்டளை கணக்கில் வைப்பதற்கு இந்த தீர்மானம் வகை செய்கிறது.

நிதி வளங்களில்  பெரும் பகுதி ஒருங்கிணைக்கப்பட்ட நிதியாக இல்லாத காரணத்தால் இச்சட்டத்தில் திருத்தம் செய்யாமல் உதவித் திட்டங்களை மேற்கொள்ள இயலாத சூழலை மாநில அரசு முன்பு எதிர்நோக்கி வந்ததாக அமிருடின் சொன்னார்.

மாநில அரசின் துணை நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து நன்கொடையாக இந்த நிதி வருகிறது. அந்த 12 கணக்குகளில் அடங்கியுள்ள திட்டங்களை மாநில அரசு எதிர்காலத்தில் எளிதாக அமல்படுத்த இந்த நடவடிக்கை உதவும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.