ECONOMY

பணவீக்கம் 3.4 விழுக்காடு அதிகரிப்பு- உணவுப் பொருள் விலை 6.1 விகிதம் உயர்வு

22 ஜூலை 2022, 9:50 AM
பணவீக்கம் 3.4 விழுக்காடு அதிகரிப்பு- உணவுப் பொருள் விலை 6.1 விகிதம் உயர்வு

கோலாலம்பூர், ஜூலை 22- இவ்வாண்டு ஜூன் மாதத்திற்கான பயனீட்டாளர் விலைக் குறியீடு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 3.4 விழுக்காடு அதிகரித்து 137.4 ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் இதன் அளவு 123.2 விழுக்காடாக இருந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரையிலான மலேசியாவின் பணவீக்க சராசரி அளவையை விட 1.9 விழுக்காடு அதிகமாகும் என்று மலேசிய புள்ளி விபரத்துறையின் தலைவர் டத்தோ டாக்டர் முகமது உஸிர் மஹாடின் கூறினார்.

உணவு குறியீடு தொடர்ந்து உயர்ந்து 6.1 விழுக்காடாக பதிவாகியுள்ளதாக கூறிய அவர், ஜூன் மாதத்திற்கான பணவீக்க அதிகரிப்புக்கு இதுவே முக்கிய காரணமாக இருந்த து என்றார்.

தொடர்புத் துறை தவிர்த்து இதர அனைத்து துறைகளும் ஏற்றம் கண்டு ஓட்டுமொத்த பணவீக்க அளவை 3.4 விழுக்காடாக ஆக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து துறை 5.4 விழுக்காடும் அதனைத் தொடர்ந்து உணவக மற்றும் ஹோட்டல் துறை 5.0 விழுக்காடும் உயர்வு கண்டது. வீட்டு அலங்காரப் பொருள்கள், உபகரணங்கள் 3.4 விழுக்காடும் பல்வகைப் பொருள்கள் மற்றும் போக்குவரத்து சேவை 2.2 விழுக்காடும் உயர்ந்துள்ளன என்றார் அவர்.

மதுபானம் நீங்கலாக மற்ற அனைத்து உணவு மற்றும் பானம் சார்ந்த துணைத் துறைகள் 2.8 விழுக்காடு முதல் 11.9 விழுக்காடு வரை ஏற்றம் கண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

வீட்டிற்கு வெளியே அதாவது உணவகங்களில் விற்கப்படும் உணவுகளில் ரொட்டி சானாய் 10.5 விழுக்காடும் சோறு மற்றும் குழம்பு 9.7 விழுக்காடும் இறைச்சி வகைகள் உணவுகள் 7.8 விழுக்காடும் மீ சார்ந்த உணவு 7.0 விழுக்காடு அதிகரிப்பை பதிவு செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.