ECONOMY

ஜெலாஜா சிலாங்கூர் திட்டத்தில் தனித்து வாழும் தாய்மார்கள், பிரத்தியேக சிறார்கள் நலனுக்கு முன்னுரிமை

22 ஜூலை 2022, 4:31 AM
ஜெலாஜா சிலாங்கூர் திட்டத்தில் தனித்து வாழும் தாய்மார்கள், பிரத்தியேக சிறார்கள் நலனுக்கு முன்னுரிமை

ஷா ஆலம், ஜூலை 22- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் போலவார்ட் சதுக்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

மறுசீரமைப்பு கண்டுள்ள பெடுலி  ராக்யாட் (ஐ.பி.ஆர்.) திட்டத்தின் அறிமுக நிகழ்வான இது காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கி வைத்து உரையாற்றுவார்.

பிரிவுமிக்க சிலாங்கூரின் அன்பான குடும்பம் என்ற தலைப்பிலான இந்த நிகழ்வில் அனிஸ் எனப்படும் சிலாங்கூர் பிரத்தியேக சிறார் உதவித் திட்டம் மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான ஆக்கத்திறனளிப்புத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும்.

இந்நிகழ்வில் தனித்து வாழும் தாய்மார்களுக்கான மானியம், அனிஸ் திட்டத்தின் கீழ் ஐவருக்கு சிறப்பு உதவி, டிடேக் அனிஸ் திட்டத்தின் கீழ் மூன்று மையங்களுக்கு உதவி, இருவருக்கு அனிஸ் சிறப்பு விருது வழங்குவது ஆகிய நிகழ்வுகள் இடம் பெறும்.

இது தவிர, கலைநிகழ்ச்சிகள், ஏரோபிக், சமையல் போட்டி, மலர் அலங்காரம், மக்கள் விளையாட்டு, கண்காட்சி போன்ற அங்கங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் கலந்து கொள்வோர் மாநில அரசின் மலிவு விலைத் திட்டத்தின் வாயிலான கோழி, முட்டை, மீன் போன்ற பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பும் கிட்டும்.

அதிகமான மாநில மக்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக ஐ.பி.ஆர். உதவித் திட்டத்திற்கு மாற்றாக 35 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் புதிய திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.