கோலாலம்பூர், ஜூலை 21- பத்து தினங்களுக்கு முன்னர் இங்குள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் வணிகர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக இது பாதுகாவலர்கள் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி இரவு 11.40 மணிக்கும் 11.45 மணிக்கும் இடையே அமாரின் கியாரா பாதுகாவலர் சாவடி அருகே உள்ள கார் நிறுத்துமிடத்தில் கோ சோக் சுவான் (வயது 63) என்பவரை தலைமறைவாக இருந்து வரும் இன்னொரு நபருடன் சேர்ந்து சுட்டுக் கொன்றதாக எம். ஹரிதாசன் (வயது 28), ஜி, சத்தோரோகுனோசிங் (வயது 32) ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
மாஜிஸ்திரேட் வோங் சாய் சியா முன்னிலையில் அவ்விருவருக்கும் எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் வாக்கும் மூலம் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


