ECONOMY

முதல் சிலாங்கூர் திட்டத்தில் கிராமப் பகுதிகளுக்கு முன்னுரிமை- சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை

20 ஜூலை 2022, 6:40 AM
முதல் சிலாங்கூர் திட்டத்தில் கிராமப் பகுதிகளுக்கு முன்னுரிமை- சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை
முதல் சிலாங்கூர் திட்டத்தில் கிராமப் பகுதிகளுக்கு முன்னுரிமை- சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை
முதல் சிலாங்கூர் திட்டத்தில் கிராமப் பகுதிகளுக்கு முன்னுரிமை- சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை

ஷா ஆலம், ஜூலை 20- வரும் திங்கள்கிழமை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள முதல் சிலாங்கூர் திட்டத்தில் (ஆர்.எஸ்.-1) கிராமப் புற மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முதல் சிலாங்கூர் திட்டம் எந்த பகுதியும் விடுபடாமல் அனைத்துப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கும் என தாம் நம்புவதாக சுங்கை பாஞ்சாங் உறுப்பினர் டத்தோ முகமது இம்ரான் தம்ரின் கூறினார்.

[caption id="attachment_468269" align="alignleft" width="284"] சுங்கை பாஞ்சாங் உறுப்பினர் டத்தோ முகமது இம்ரான் தம்ரின்[/caption]

சிலாங்கூர் என்பது ஷா ஆலம் அல்லது நகர்ப்புறங்களை மட்டும் உள்ளடக்கிய மாநிலம் அல்ல. எனது பகுதியான சபாக் பெர்ணம் மாவட்டம் போன்ற கிராமப் பகுதிகளையும் அது உள்ளடக்கியுள்ளது. அப்பகுதிகளுக்கு இந்த முதல் சிலாங்கூர் திட்டத்தில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

முதல் சிலாங்கூர் திட்டத்தின் ஐந்தாண்டு கால அமலாக்கத்திற்கு பின்னரும் சபாக் பெர்ணம் தொடர்ந்து பின்தங்கியிருப்பதைக் காண விரும்பவில்லை. சிலாங்கூரிலுள்ள இதர மாவட்டங்களுக்கும் சபாக் பெர்ணம் மாவட்டத்திற்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.

[caption id="attachment_468270" align="alignright" width="308"] சிஜங்காங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் யூனுஸ் ஹைரி[/caption]

இதனிடையே, முதல் சிலாங்கூர் திட்டம் குறித்து கருத்துரைத்த சிஜங்காங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் யூனுஸ் ஹைரி, இத்திட்டம் தொடர்பான ஆய்வரங்கில் வழங்கப்பட்ட தகவல்கள் சிறப்பான ஐந்தாண்டுத் திட்டம் என்பதை புலப்படுத்தும் வகையில் உள்ளது என்றார்.

இது ஒரு நல்ல திட்டம். கோவிட்-19 மற்றும் வெள்ளம் போன்ற பிரச்னைகளை எதிர்நோக்கிய சிலாங்கூர் மாநிலத்திற்கு இத்தகைய திட்டங்களின் அமலாக்கம் அவசியம் தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.