காஜாங், ஜூலை 19 - கெஅடிலான் துணைத் தலைவர் ரபிசி ரம்லி இன் அழைப்பிற்கு இணங்க, கெ அடிலான் சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர், உலு லங்காட், செலயாங், கிள்ளான் கோத்தா ராஜா, நெகிரி செம்பிலான் ரெம்பாவ் கிளை, பேராக் பத்துக்காஜா பகாங் தான ராத்தா கிளை போன்ற பல கிளைகள் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அலட்சியம் காரணமாக சுலு சுல்தானின் வாரிசுகளிடம் இருந்து RM6,750 கோடி வெள்ளி நிதி கோரிக்கையை நாடு எதிர்கொள்ள வேண்டி'யுள்ளது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும், கோத்தா ராஜா கிளைத் தலைவர் டாக்டர் குணராஜ், உலு லங்காட் கிளைத் தலைவர், ராஜன் முனுசாமி, மற்றும் பல கிளை தலைவர்கள், மகளிர் மற்றும் ஏஎம்கே தலைவர்கள் தலைமையில் காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது.
2013ல் சுலு சுல்தானின் வாரிசுகளுக்கு (ஒப்பந்தத்தின்படி) வருடாந்திர மானியங்களை நிறுத்த டத்தோஸ்ரீ நஜிப் பின் நிர்வாகத்தின் முடிவைத் தொடர்ந்து அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். நஜிப் துன் ரசாக் நாட்டின் 6வது பிரதமராக தனது கடமைகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டவில்லை என்றால், அவர் அந்த வழக்கை எதிர்த்து மனு செய்திருக்க வேண்டும்.

சுலு சுல்தானின் வாரிசுகள் பதிலடி கொடுக்கும் வகையில் இவ்விவகாரத்தை சர்வதேச நிலைக்கு கொண்டு சென்று மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்றார்.
டத்தோஸ்ரீ நஜிப் பிரதமராக இருந்தபோது 2 நவம்பர் 2017 அன்று எடுக்கப்பட்ட சம்மன் நடவடிக்கை குறித்த அறிவிப்பு அவரது நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது.
ஒரு மலேசியர் என்ற முறையில், தற்போதுள்ள குற்றவியல் கோட் (சட்டம் 574) மற்றும் அரசு ஊழியரை பணியில் இருக்கும் போது கட்டுப்படுத்தும் விதிகள் 132 (பொது சேவைகள்) மற்றும் விதிமுறைகள்-பொது அதிகாரிகள் (நடத்தை மற்றும் ஒழுக்கம்) ஒழுங்குமுறைகள் 1993 ஃபெடரல் அரசியலமைப்பின் (P.U.A. 395) கீழ் இந்த பிரச்சனையை தீர்ப்பதில் செய்த அலட்சியத்தின் கூறுகளை தீர்மானிக்க டத்தோஸ்ரீ நஜிப்பை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மக்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய அலட்சியப் போக்கின் காரணமாக அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை முழு சிரத்தையுடன் மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு விசாரணையை திறக்க இந்த அறிக்கை அனுமதிக்கும் என நம்புவதாக அவர்கள் கூறினார்.



