ad
PBT

டுசுன் துவா தொகுதியில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு திறன் பயிற்சி

13 ஜூலை 2022, 5:06 AM
டுசுன் துவா தொகுதியில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு திறன் பயிற்சி

ஷா ஆலம், ஜூலை 13- டுசுன் துவா தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 23 மற்றும் ஆகஸ்டு மாதம் 23ஆம் தேதிகளில் 3எம் (எண், எழுத்து, வாசிப்பு) பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளது.

காஜாங் நகராண்மைக் கழக 2வது மண்டல உறுப்பினரின் ஆதரவிலான இந்த பயிற்சிப் பட்டறை செராஸ், சந்தேக்ஸ் சமூக மண்டபத்தில் காலை 9.00 மணி தொடங்கி நடைபெறும் என்று காஜாங் நகராண்மைக் கழகம் கூறியது.

எண், எழுத்து மற்றும் வாசிப்பில் உங்கள் பிள்ளைகள் பின்தங்கியிருந்தால் அது குறித்து நீங்கள் கவலையடைய வேண்டாம். டுசுன் துவா சட்டமன்ற சேவை மையம் மற்றும் காஜாங் நகராண்மைக் கழக மண்டலம் 2 ஆகியவற்றின் ஏற்பாட்டில் ரீட்-ரைட்-கவுண்ட் 1 மற்றும் 2 ஆம் பயிற்சித் தொடர்களில் பங்கு கொள்ளுங்கள் என நகராண்மைக் கழகத்தின் பேஸ்புக் பதிவு குறிப்பிட்டது.

ஏழு வயதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த பயிற்சிப் பட்டறையில்  முதலில் வரும் 50 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

கல்வியில் பின்தங்கிய பிள்ளைகளுக்கு உதவும் நோக்கிலான இத்திட்டத்தில் தங்கள் பிள்ளைகள் தவறாது பங்கேற்பதை உறுதி செய்யுமாறு பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதற்கான விண்ணப் பாரங்களை https://forms.gle/kBQ2dagdqsqxQDfE7  என்ற அகப்பக்கம் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம்.  விண்ணம் செய்வதற்கான இறுதி நாள் ஜூலை 22 ஆம் தேதியாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.