கோம்பாக், ஜூலை 11- தியாகத் திருநாளை முன்னிட்டு சுங்கை துவா தொகுதியிலுள்ள வசதி குறைந்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக ஒன்பது மாடுகள் மற்றும் 20 ஆடுகளை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்கினார்.
நாடு பெருந்தொற்று பாதிப்பை எதிர்நோக்குவதற்கு முன்பிருந்து இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருவதாக மந்திரி புசார் தெரிவித்தார்.
கிராம, வட்டார மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு செயல் குழு நிலையில் இந்த கால்நடைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. மக்களுக்கும் தொகுதி சேவை மையத்திற்கும் இடையே காணப்படும் அணுக்கமான ஒத்துழைப்பை புலப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
கம்போங் சுங்கை துவா, பாடாங் சாங்கியில் சுங்கை துவா தொகுதி நிலையிலான பிரதான தியாக நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
முன்னதாக அவர், ஆடு மற்றும் மாடுகளைப் பலியிடும் நிகழ்வில் கலந்து கொண்டார்.


