கோலாலம்பூர், ஜூலை 11- இன்று காலை 10.30 மணி நிலவரப்படி நாட்டிலுள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சீராகக் காணப்பட்டது.
வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு நோக்கிச் செல்லும் சாலைகளின் இரு தடங்கள் மற்றும் டோல் சாவடிகளில் போக்குவரத்து சீராக காணப்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் கூறியது.
மேலும் ஜோகூர் பாலம் மற்றும் மலேசியா-சிங்கப்பூரை இணைக்கும் இரண்டாவது பாலம் ஆகியவற்றிலும் போக்குவரத்து தடங்கல் இன்றி காணப்பட்டது என்ற அது மேலும் தெரிவித்தது.
இதனிடையே, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 52.7வது கிலோமீட்டரின் வடக்கு தடத்தில் செடெனாக்-சிம்பாங் ரெங்கம் இடையே விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதாவும் எனினும், இந்த விபத்தினால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையின் 34வது கிலோ மீட்டரில் கெந்திங் செம்பாவிலிருந்து கோம்பாக் செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், அந்த விபத்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தவில்லை.
பெருநாள் விடுமுறை முடிந்து கிழக்கு பகுதியிலிருந்தும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வழியாகவும் கிள்ளான் பள்ளத்தாக்கு திரும்புவோர் பயண நேர அட்டவணையைப் பின்பற்றும்படி மலேசிய நெடுஞ்சாலை வாரியம் வாகனமோட்டிகளைக் கேட்டுக் கொண்டது.


