கோம்பாக், ஜூலை 9: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் (பிகேபிஎஸ்) ஏற்பாடு செய்துள்ள மாநில அரசின் பரிவுமிக்க விற்பனை திட்டம் இந்த ஆண்டு இறுதி வரை தொடரும்.
அதன் சந்தைப்படுத்தல் மேலாளர் முகமது சாட் மாஷா, விற்பனை நிகழ்ச்சிகள் சிறிய அளவில் அடிக்கடி நடத்தப்படலாம் என்றார்.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதாக அவர் கூறினார்.
" பொருட்களின் விலை அதிகரிக்கும் போது மாநிலத்தில் மக்களின் சுமையைக் குறைக்க அடையாளம் காணப்பட்ட பல இடங்களில் நாங்கள் அடிக்கடி (விற்பனை) நடத்துவோம்," என்று அவர் சிலாங்கூர்கினியை சந்தித்தபோது கூறினார்.


