தோக்கியோ, ஜூலை 8- ஜப்பானின் மேற்கு நகரான நாராவில் நிகழ்வொன்றில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
அச்சமயத்தில் துப்பாக்கி வேட்டு போன்ற சத்தம் கேட்டது. சந்தேகப் பேர்வழி ஒருவன் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டான். அபே உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இரு முறை வேட்டுச் சத்தம் கேட்டதாக என்.எச்.கே. செய்தி நிறுவன நிருபர் கூறினார்.
அந்த முன்னாள் பிரதமர் சுயநினைவற்ற நிலையில் உள்ளதாகவும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கியூடோ செய்தி நிறுவனம் தெரிவித்தது.


