ECONOMY

100  செல்ஹாக் கண்காட்சியாளர்கள் ஹைப்பர் மார்க்கெட் சந்தையில் ஊடுருவ  உதவியது

8 ஜூலை 2022, 9:36 AM
100  செல்ஹாக் கண்காட்சியாளர்கள் ஹைப்பர் மார்க்கெட் சந்தையில் ஊடுருவ  உதவியது

ஷா ஆலம், ஜூலை 8: கடந்த மார்ச் மாதம் நடந்த சிலாங்கூர் சர்வதேச ஹலால் மாநாட்டில் (செல்ஹாக்) பங்கேற்ற சுமார் 100 கண்காட்சியாளர்கள் பல முன்னணி ஹைப்பர் மார்க்கெட் களின் சந்தைகளில் ஊடுருவ வழி அமைத்தது.

பயனிட்டாளர் மற்றும் ஹலால் தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறியதாவது,  செல்ஹாக் கண்காட்சி பங்கேற்பாளர்களின்  சுமார் 100 தயாரிப்புகளும் சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளில் சந்தைப்படுத்தலில் மட்டுமின்றி பயனிட்டாளர்களுக்கும் விற்கப்பட்டன என்றார்.

"இந்த திட்டத்திற்குப் பிறகு மிகவும் பெருமையான விஷயம் என்னவென்றால், பங்கேற்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளை நாடு முழுவதும் சந்தைப்படுத்த RM23 லட்சம் மதிப்புள்ள பெட்ரோனாஸ் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளனர்.

"சிலாங்கூரில், மக்கள் உற்பத்தி செய்யும் மைக்ரோ தயாரிப்புகளை செல்ஹாக் போன்ற எக்ஸ்போக்களின் அமைப்பு உட்பட பல்வேறு தளங்கள் மூலம் சந்தைப்படுத்த உதவுகிறோம்," என்று அவர் கூறினார்.

இன்று ஷா ஆலம் சிட்டி கவுன்சில் கன்வென்ஷன் சென்டரில் நடந்த முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) 2021-2025 இன் முன் வெளியீட்டு கருத்தரங்குடன் இணைந்து RS-1 பொருளாதார மன்றத்தின் போது அவர் இவ்வாறு கூறினார்.

மலேசியாவை பிரபலப்படுத்த  இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த நாட்டின்  ஹலால் தொழில் துறையின் முகாந்திரமாக  ஆக்க வேண்டும்.

ஐரோப்பிய துறைமுக பட்டினம் "ரோட்டர்டாம்'' மலேசியாவை ஹலால் தரத்திற்கான குறிப்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது, இதனால் இந்த நாடு முழு உலகிற்கும் ஒரு தர குறிப்பாகும் ஆகும்," என்று அவர் கூறினார்.

இன்று  ஒரு  சிம்போசியத்தை  மந்திரி புசார் டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரி  துவக்கி வைத்து உரை நிகழ்த்தினர்.

இதற்கிடையில், RS- 1 பொருளாதாரம், சமூகம், நிலைத்தன்மை மற்றும் நிர்வாகத்தை உள்ளடக்கிய நான்கு முக்கிய கருப்பொருள்கள் மீது கவனம் செலுத்துகிறது என்று அமிருடின் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்குள் புத்திசாலித்தன, மாநிலம் சிலாங்கூர் என்ற கருப்பொருள் படி, வளமான வாழ்வுக்கும் வெற்றிக்கும்  இது வழிகாட்டியாக இருக்கும்  என்றார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.