ECONOMY

ஹாஜ்ஜூப் பெருநாள் மலிவு விற்பனை இன்று கோம்பாக், பண்டான் இண்டாவில் நடைபெறும்

8 ஜூலை 2022, 4:57 AM
ஹாஜ்ஜூப் பெருநாள் மலிவு விற்பனை இன்று கோம்பாக், பண்டான் இண்டாவில் நடைபெறும்

ஷா ஆலம், ஜூலை 8- ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள மலிவு  விற்பனைத் திட்டம் இன்று கோம்பாக் மற்றும் பண்டான் இண்டாவில் நடைபெறுகிறது.

இவ்விரு இடங்களிலும் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை இந்த விற்பனை இயக்கம் நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) கூறியது.

இந்த விற்பனை ஜாலான் ஜி.பி.2, தாமான் கோம்பாக் பெர்மாயிலும் பாண்டான் இண்டா, பங்சாபுரி இனாய் புளோக் டி மற்றும் இ பின்புறத்திலும் நடைபெறும்.

ஹாஜ்ஜூப் பெருநாளை நாம் அனைவரும் மகிழ்ச்சியாக  கொண்டாடுவதற்கு முன்னர் நடத்தப்படும் இறுதி பெருநாள் மலிவு விற்பனை இதுவாகும் என அக்கழகம் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தது.

இந்த மலிவு விற்பனை இயக்கத்தில்  ஒரு கோழி வெ.15.00 விலையிலும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 12 வெள்ளி விலையிலும் சமையல் எண்ணைய் பாக்கெட் 2.00 வெள்ளி விலையிலும் உறைய வைக்கப்பட்ட மீன் 8.00 வெள்ளி விலையிலும் விற்கப்படும்.

இது விட அரசி, புளோட் அரிசி, மாவு, சமையல் எண்ணெய், சீனி ஆகிய பொருள்களும் இங்கு கிடைக்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.