ECONOMY

ஸ்ரீ பெட்டாலிங் சண்டையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

29 ஜூன் 2022, 9:37 AM
ஸ்ரீ பெட்டாலிங் சண்டையில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர்

கோலாலம்பூர், ஜூன் 29- திங்கட்கிழமை அதிகாலை இங்குள்ள ஜாலான் ராடின் பாகுஸ், ஸ்ரீ பெட்டாலிங்கில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் தொடர்புடைய 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி அமிஹிசாம் அப்துல் ஷுக்கோர் கூறுகையில், சண்டையில் பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் மற்றும் மது பாட்டில்கள் தாக்கியதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன.

"பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து அவரது சேதமடைந்த காரைப் பற்றிய புகாரை காவல்துறை பெற்றுள்ளது, பின்புற கண்ணாடி மற்றும் பின்புற ஜன்னல்களின் வலது பக்கம் உடைக்கப்பட்டது.

"பாதிக்கப்பட்ட வரும் அவரது நண்பர்களும் சண்டை நடந்த இடத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்," என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கலவரத்திற்கு குற்றவியல் சட்டத்தின் 427வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இது இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அமிஹிசாம் கூறினார்.

இந்த சம்பவத்தின் 43 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.