ஷா ஆலம், ஜூன் 24- நாளை கோல லங்காட், பந்தாய் மோரிப் சதுக்கத்தில் நடைபெறவிருக்கும் “ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்“ திட்டத்தில் டீம் சிலாங்கூர் அமைப்பைச் சேர்ந்த 20 தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அந்நிகழ்வில் மாநில அரசின் துணை நிறுவனங்கள் அமைத்துள்ள காட்சிக் கூடங்களுக்கு வரும் பொதுமக்களை கவனித்து வேண்டிய உதவிகளைச் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபடுவர் என்று டீம் சிலாங்கூர் அமைப்பின் தலைமைச் செயலக அதிகாரி ஷியாய்ஸெல் கெமான் கூறினார்.
மாநில அரசின் உதவித் திட்டங்களுக்கு பதிவு செய்வதில் பொது மக்கள் சிரமத்தை எதிர்நோக்கும் பட்சத்தில் அவர்கள் உரிய வழிகாட்டுதலை வழங்குவார்கள் என அவர் தெரிவித்தார்.
நாளை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் கலைநிகழ்ச்சி, ஏரோபிக், சமையல் போட்டி, மலர் அலங்காரம் மக்கள் விளையாட்டு உள்ளிட்ட அங்கங்கள் இடம் பெறும்.
மாநில அரசின் துணை நிறுவனங்களின் பங்கேற்பிலான இந்த மக்கள் உதவித் திட்ட அறிமுக நிகழ்வு கடந்த வாரம் அம்பாங், தாமான் கோசாசில் தொடக்கம் கண்டது.
இந்நிகழ்வு வரும் ஜூ 2 ஆம் தேதி கோல சிலாங்கூர் பிரதான அரங்கிலும், 16 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் போலவாட் சதுக்கத்திலும் 31 ஆம் தேதி கோம்பாக், பத்து கேவ்ஸ் பொது மைதானத்திலும் நடைபெறும்.



