ECONOMY

கிள்ளான் பள்ளத்தாக்கு கே.டி.எம் வழித்தடத்தில் ஒரு மாதத்திற்கு கட்டணமற்ற சேவை, இலவச பயணம் !

17 ஜூன் 2022, 8:39 AM
கிள்ளான் பள்ளத்தாக்கு கே.டி.எம் வழித்தடத்தில் ஒரு மாதத்திற்கு கட்டணமற்ற சேவை, இலவச பயணம் !

கோலாலம்பூர், ஜூன் 17: கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடத்தில் கே.டி.எம் கொமுயுட்டர் பயணிகள் இன்று முதல் ஒரு மாதத்திற்கு இலவசமாக சேவையை அனுபவிக்க முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

இந்த நற்செய்தியை அறிவித்த அவர், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மட்டுமின்றி, சாலை நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இலவசக் தேவைகள் வழங்கப்படுவதாகவும் கூறினார்.

“நான் அறிவித்தபடி, RapidKL ஆல் இயக்கப்படும் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கும் ஒரு மாதத்திற்கான இலவச கட்டணத்தை அரசாங்கம் வழங்கும்.

"ரெபிட் கே.எல் தவிர, கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடத்தில் உள்ள கே.டி.எம் கொமுயுட்டர் சேவையில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு இலவசமாக பயணம் செய்யலாம்.," என்று அவர் கூறினார்.

இத்தகைய பொதுப் போக்குவரத்து சேவைகளை வாடிக்கையாளர்கள் இலவசக் கட்டணக் காலத்தில் மட்டும் பயன்படுத்தாமல் எல்லா நேரங்களிலும் பயன்படுத்த வேண்டும், மேலும், அது பயண நேரத்தை மிச்சப்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

ரெபிட் கே.எல் இன் கீழ் செயல்படும் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளுக்கும் RM14 கோடி மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடத்தில் கே.டி.எம் சேவைக்கு இலவச கட்டணங்களை வழங்குவதற்காக RM1.5 கோடி மானியம் வழங்கப்பட்டது. இந்த இலவச சேவைக்காக அரசாங்கம் மொத்தமாக RM15.5 கோடி மானியத்தை ஒதுக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.