ECONOMY

மாநில வேலைவாய்ப்பு திட்டம் 600க்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு வேலை கிடைக்க உதவியது

14 ஜூன் 2022, 9:52 AM
மாநில வேலைவாய்ப்பு திட்டம் 600க்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு வேலை கிடைக்க உதவியது
மாநில வேலைவாய்ப்பு திட்டம் 600க்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு வேலை கிடைக்க உதவியது

ஷா ஆலம், ஜூன் 14: சிலாங்கூர் ஊழியர் ஆற்றல் மேம்பாட்டு பிரிவு (யுபிபிஎஸ்) படி, மொத்தம் 641 நபர்கள் இதுவரை ஏழு தொடர் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் பணிபுரிய ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ் விஜயன் கூறுகையில், இன்னும் இரண்டு திட்டத் தொடர்கள் எஞ்சி இருந்த போதிலும், இந்த எண்ணிக்கை அதன் ஆரம்ப கட்ட இலக்கு 500 பேரை தாண்டியது.

[caption id="attachment_466271" align="alignleft" width="280"] சிலாங்கூர் ஊழியர் ஆற்றல் மேம்பாட்டு பிரிவின் (யுபிபிஎஸ்) தலைமை ஒருங்கிணைப்பாளர் - எஸ் விஜயன்[/caption]

அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே உற்பத்தி, துறைமுகம், தளவாடங்கள் மற்றும் பொருட்களை விநியோகம் போன்ற நிறுவனங்களில் சேவைகளை ஆரம்பித்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

“பொதுமக்களுக்கு, குறிப்பாக கோவிட்-19 காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு பொருத்தமான வேலைகள் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான எட்டு இடங்களை ஆராய்ந்துள்ளோம்.

"பெறப்பட்ட தரவுகளில் கடந்த வாரம் தஞ்சோங் காராங்கில் நடந்த திட்டம் சேர்க்கப்படவில்லை," என்று அவர் சிலாங்கூர்கினியை தொடர்பு கொண்டபோது கூறினார்.

இதற்கிடையில், அடுத்த திட்டம் ஜூன் 18 ஆம் தேதி கோலா லங்காட்டில் உள்ள டேவான் பந்திங் பாருவில் நடைபெறும் என்றும் அதைத் தொடர்ந்து டேவான் ஸ்ரீ பெர்ணாம், சபாக் பெர்ணாம் (ஜூன் 25) என்றும் அவர் கூறினார்.

"எனவே, திட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள பொதுமக்கள் வேலை தேடுவதற்கான வாய்ப்புகள் மற்றும் இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் ஊக்குவிக்கிறேன்," என்று அவர் கூறினார்.

ஜோப்கேர் டூர் என்பது சிலாங்கூர் அரசாங்கத்தின் முன்முயற்சி ஆகும், இது கோவிட்-19 தொற்றுநோயால் தங்கள் வருமானத்தை இழந்த குறைந்த, நடுத்தர மற்றும் உயர் திறமையான மக்கள் வேலைகளைப் பெற உதவும்.

சமூகப் பாதுகாப்பு அமைப்புடன் (சொக்சோ) இணைந்து இந்த திட்டத்தில் 15 உள்ளூர் நிறுவனங்கள் இணைந்து பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 3,000 வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.

ஆர்வமுள்ள நபர்கள் https://uppselangor.wixsite.com/my-site இணைப்பு மூலம் பதிவு செய்யலாம்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.