ECONOMY

உண்மையான வருமானத்தை அறிவிக்காத 31,589 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள்- வருமான வரி வாரியம் அம்பலம்

14 ஜூன் 2022, 9:45 AM
உண்மையான வருமானத்தை அறிவிக்காத 31,589 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள்- வருமான வரி வாரியம் அம்பலம்

கோலாலம்பூர், ஜூன் 14- உண்மையான வருமானத்தை இன்னும் அறிவிக்காத 31,598 தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் இதரத் தரப்பினரை உள்நாட்டு வருமான வரி வாரியம் அடையாளம் கண்டுள்ளது.

இதனால் நாட்டின் வருமானத்தில் ஏற்படக்கூடிய கசிவின் மதிப்பு 66 கோடியே 50 லட்சம் வெள்ளியாகும் என உள்நாட்டு வருமான வரி வாரியம் அறிக்கை ஒன்றில் கூறியது. இந்த எண்ணிக்கை கணிசமான ஒன்று என்பதோடு இதனை உடனடியாக தடுக்காவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என அது குறிப்பிட்டது.

சொத்துக் கொள்முதல் மற்றும் அச்சொத்துக்களுக்காக ஐந்து லட்சம் வெள்ளி அல்லது அதற்கும் மேல் கடனுதவி அல்லது உத்தரவாதம் பெற்றது தொடர்பான தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டத் தரப்பினர் அடையாளம் காணப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

இவ்விவிவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இவ்வாண்டு ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு மாதகால அவகாசத்திற்குப் பின்னர் கணக்கு தணிக்கை, சிவில் விசாரணை, குற்றவியல் நடவடிக்கை போன்ற சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு எதிராக வருமான வரி வாரியம் எடுக்கும். 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.