ECONOMY

கம்போங் தாசிக் பெர்மாயில் மாநில அரசின் பரிவுமிக்க விற்பனை திட்டத்தில் 200 கோழிகள் விற்பனை

14 ஜூன் 2022, 9:21 AM
கம்போங் தாசிக் பெர்மாயில் மாநில அரசின் பரிவுமிக்க விற்பனை திட்டத்தில் 200 கோழிகள் விற்பனை

ஷா ஆலம், ஜூன் 14: கடந்த சனிக்கிழமை அம்பாங்கின் கம்போங் தாசிக் பெர்மாய் நகரில் நடைபெற்ற மாநில அரசின் பரிவுமிக்க விற்பனை திட்டத்தில் கோழி மற்றும் முட்டைகள் அதிகம் விற்பனையான பொருட்களாக இருந்தன.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான திட்டத்தில் மொத்தம் 200 கோழிகளும் 150 தட்டு முட்டைகளும் விற்பனை செய்யப் பட்டதாக சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) தெரிவித்துள்ளது.

“100 கிலோகிராம் பழங்கள் மற்றும் 40 கிலோ மீன்களும் விற்பனை செய்யப்பட்ட,  சந்தையில்   கிடைத்த வரவேற்பு மிகவும் ஊக்கமளிக்கிறது.

"இதன் பின்னர் திட்டத்தின் இடம் பிகேபிஎஸ் பேஸ்புக் மூலம் அவ்வப்போது தெரிவிக்கப்படும்" என்று அவர் சிலாங்கூர்கினியை தொடர்பு கொண்டபோது கூறினார்.

மே 27 அன்று, விவசாயம் அடிப்படையிலான ஆட்சிக்குழு உறுப்பினர் இஸாம் ஹாஷிம், இந்த மாதம் விற்பனைக்கு வரும் கோழிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 10,000 லிருந்து 20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஆரம்ப திட்டத்துடன் ஒப்பிடுகையில் 10,000 கோழிகள் அதிகரித்திருப்பது சிலாங்கூரில் அதிக தேவை காரணமாக இருப்பதாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.