ECONOMY

கஞ்சா பிஸ்கட் விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் நபர்  கைது

14 ஜூன் 2022, 9:05 AM
கஞ்சா பிஸ்கட் விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் நபர்  கைது

கோலாலம்பூர், ஜூன் 14: கடந்த புதன்கிழமை, இங்குள்ள பண்டார் மஞ்சலாரா கெப்போங்கில், உள்ள ஒரு குடியிருப்பில் ஆன்லைனில், போதைப் பொருளை பிஸ்கட் வடிவில் விற்பனை செய்ததற்காக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

21 வயதுடைய அந்நபர் கஞ்சா சுவை கொண்ட பிஸ்கட்களை சமூக ஊடகங்கள் மூலம் குறிப்பிட்ட மற்றும் ஆர்வமுள்ள நபர்களுக்கு மட்டுமே விற்பது கண்டுபிடிக்கப்பட்டதாக செந்தூல் காவல்துறைத் தலைவர் ஏசிபி பெ எங் லாய் தெரிவித்தார்.

"நாங்கள் அடுக்குமாடி குடியிருப்பினை சோதனை செய்தோம், அதில் ‘Happiness Begins with a Wonder Cake’ sticker,’ ஸ்டிக்கர் கொண்ட இரண்டு பேப்பர் பேக்கேஜ்களை கண்டோம்.

"கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி உள்ள பகுதிகளில், 230 கிராம் எடையுள்ள ஒரு பாக்கெட்டுக்கு 6 துண்டுகள் கொண்ட பிஸ்கட்கள் RM100 விலையில் விற்கப்பட்டது ஆய்வில் கண்டறியப்பட்டது," என்று அவர் இன்று செந்தூல் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் விளைவாக, அடுத்த நாள் அதே அடுக்குமாடி குடியிருப்பில் மற்றும் ஜாலான் லின்டாங், பத்து கேவ்ஸ் பகுதியில், மேலும் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர் என்று  கூறினார்.

25.15 கிலோ எடையுள்ள கஞ்சா, 2.86 கிலோ எடையுள்ள எக்ஸ்டசி மாத்திரைகள், 83.4 கிராம் எடையுள்ள கஞ்சா, 6,000 ரிங்கிட் ரொக்கம் மற்றும் ஐந்து நகைகள் உட்பட மொத்தம் 248,490 ரிங்கிட்கள் மதிப்புள்ளவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறுநீர் பரிசோதனையில் மூன்று ஆண்களிடம் போதைப் பொருளுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர்களில் நான்கு பேருக்கு முந்தைய போதைப்பொருள் தொடர்பான குற்றப்பதிவுகள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என்றும் போலீஸ் தலைவர் ஏசிபி பெ எங் லாய்  கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.