ஷா ஆலம், ஜூன் 13 - தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கு தேவையான மூலதனத்தைத் திரட்டுவதற்கு ஐ-பிஸ்னஸ் கடனுதவித் திட்டம் மூலம் வழங்கப்படும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிலாங்கூரில் உள்ள தொழில்முனைவோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா சிலாங்கூர்) அறவாரியம் ஐ-பிஸ்னஸ் திட்டத்தின் வாயிலாக வெ.50,000 வரை கடனுதவி வழங்குகிறது. மேலும், பல தொழில்முனைவோர் இத்திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ளனர்.
ஐ-பிஸ்னஸ் திட்டம் அனைத்து வணிகத் துறைகளுக்கும் கடனுதவி வாய்ப்பை வழங்குகிறது. மேல் விபரங்களுக்கு www.hijrahselangor.com என்ற அகப்பக்கத்தை வலம் வாருங்கள் என்று தனது முகநூல் பதிவில் அந்த அறவாரியம் தெரிவித்துள்ளது.
இந்த கடனுதவிக்கான விண்ணப்பங்களை http://mikrokredit.selangor.gov.my/e-hijrah/login இணைப்பின் வாயிலாக செய்யலாம் .
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை ஹிஜ்ரா அறவாரியம் 965,000 வெள்ளியை ஐ-பிஸ்னஸ் திட்டத்தின் வாயிலாக கடனுதவி வழங்கியுள்ளது என்று ஹிஜ்ரா சிலாங்கூர் மேம்பாட்டு அதிகாரி முகமது ரிட்வான் அஸ்மாரா முன்னதாக கூறியிருந்தார்.
இந்த கடனுதவித் திட்டம் மூலம் மாநிலத்தில் உள்ள மொத்தம் 2,229 தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக வெ.1,000 முதல் வெ.50,000 வரையில் கடன் பெற்றுள்ளனர்.


