ECONOMY

கால்நடைத் தீவன இறக்குமதியைக் குறைக்க தானியச் சோள பயிரீட்டுத் திட்டம் உதவும் - பி.கே.பி.எஸ். தகவல்

13 ஜூன் 2022, 9:57 AM
கால்நடைத் தீவன இறக்குமதியைக் குறைக்க தானியச் சோள பயிரீட்டுத் திட்டம் உதவும் - பி.கே.பி.எஸ். தகவல்

ஷா ஆலம், ஜூன் 13- கால்நடைத் தீவன இறக்குமதியை குறைப்பதற்காக தானியச் சோள பயிரீட்டுத் திட்டத்தில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) ஈடுபடுவதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

உணவு பாதுகாப்புத் திட்ட முன்னெடுப்பின் வாயிலாக கோல லங்காட், சுங்கை கெலாம்பு பகுதியில் சுமார் 700 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் இந்த சோள பயிரீட்டுத் திட்டத்தின் வழி கோழி மற்றும் இதர கால்நடை தீவன விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

கோழி விலையில் பெரும்பகுதி அதன் தீவனத்தைச்  சார்ந்திருப்பதை கண்டறிந்தப் பின்னர் இந்த திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம். இதற்கு முன்னர் நாம் 100 விழுக்காட்டு தீவனத்தை இறக்குமதி செய்து வந்தோம் என்றார் அவர்.

உதாரணத்திற்கு, கோழி தீவனமாக பயன்படுத்தப்படும் தானியச் சோளத்தை டன் ஒன்றுக்கு வெ.1,200 என்ற விலையில் இறக்குமதி செய்து வந்தோம். இப்போது அதன் விலை இரட்டிப்பாகி வெ.3,200 ஆகி விட்டது என்று அவர் தெரிவித்தார்.

இதே போன்ற திட்டம் கெடா மாநிலத்தில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதனுடன் சேர்த்து தானியச் சோளம் பயிரிடப்படும் நிலத்தின் மொத்த மதிப்பு 1,100 ஏக்கராகும் என்றார்.

இவ்விரு திட்டங்கள் வாயிலாக கிடைக்கும் சோளம் இருபது லட்சம் கோழிகளுக்கு தீவனமாகப் பயன்படுத்த போதுமானதாகும் என்று ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.