ஷா ஆலம், ஜூன் 10: கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் (எம்பிகேஎல்) பார்க்கிங் சம்மனுக்கான கட்டணத்தை 80 விழுக்காடு வரை குறைத்து வழங்குகிறது.
இந்தச் சலுகை கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி இந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதியுடன் முடிவடையும் என்று பேஸ்புக் மூலம் ஊராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் சம்மன்களை ஆன்லைனில் அல்லது ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் செயலியில் சரிபார்க்கலாம்.
Jompay மற்றும் ஆன்லைனில் பணம் செலுத்தலாம் அல்லது கிரெடிட் அல்லது டெபிட் மூலம் எம்பிகேஎல் கட்டண கவுண்டர்களிலும் பணம் செலுத்தலாம்.
ஏதேனும் விசாரணைகளுக்கு, 03-3181 1809 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது www.mpkl.gov.my என்ற இணையதளத்தைப் அணுகலாம்.


