ECONOMY

கின்ராரா தொகுதியில் 1,800 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகள் விநியோகம்

8 ஜூன் 2022, 8:08 AM
கின்ராரா தொகுதியில் 1,800 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகள் விநியோகம்

ஷா ஆலம், ஜூன் 8- கின்ராரா தொகுதியைச் சேர்ந்த 1,800 பேர் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை இம்மாதம் 21 ஆம் தேதி வரை கின்ராரா சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாண்டு மார்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பிறந்த நாளைக் கொண்டாடும் மூத்த குடிமக்கள் 100 வெள்ளிக்கான இந்த பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இவ்வாண்டு மார்ச் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் பிறந்த  மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்ட (எஸ்.எம்.யு.இ.) உறுப்பினர்கள் தொகுதி சேவை மையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தங்கள் அடையாளக் கார்டைக் காட்டி பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த பற்றுச்சீட்டுகளை வழங்கும் பணி நேற்று தொடங்கி வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். மூத்த குடிமக்கள் தங்கள் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இந்த சிறிய நிதியுதவி ஓரளவு துணை புரியும் என நம்புகிறோம் என்றார் அவர்.

இந்த பற்றுச் சீட்டு விநியோகம் தொடர்பான மேல் விபரங்களுக்கு 03-80821661 என்ற தொலைபேசி எண்களில் தொகுதி சேவை மையத்தை  தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.