ECONOMY

நோய்த் தொற்றுக்கு பிந்தைய சுகாதாரத் திட்டத்திற்கு பொது சுகாதார ஆலோசக மன்றம் வலு சேர்க்கும்

7 ஜூன் 2022, 10:57 AM
நோய்த் தொற்றுக்கு பிந்தைய சுகாதாரத் திட்டத்திற்கு பொது சுகாதார ஆலோசக மன்றம் வலு சேர்க்கும்

ஷா ஆலம், ஜூன் 7- பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழுவின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் சிலாங்கூர் பொது சுகாதார ஆலோசக மன்றத்தை (செல்பாக்) மாநில அரசு உருவாக்கியுள்ளது.

நாடு எண்டமிக் கட்டத்தில் நுழைந்துள்ள நிலையில் பொது சுகாதாரத் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த மன்றத்திற்கு மாநில அரசு கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி அங்கீகாரம் வழங்கியதாக மந்திரி புசார் கூறினார்.

மலேசிய தேசிய உடலாரோக்கிய திட்ட செயல்குழுவை மாநில நிலையில் தொடங்க வேண்டும் என்ற சுகாதார அமைச்சின் நோக்கத்திற்கேற்பவும் இந்த மன்றம் அமைக்கப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் இன்று நடைபெற்ற செல்பாக் தொடக்க விழா மற்றும் சிலாங்கூர் முன்களப் பணியாளர்களை கௌரவிக்கும்  நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.

பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் செல்பாக் தலைவருமான டாக்டர் சித்தி மரியா மாமுட், முன்னாள் சுகாதார அமைச்சர்  டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பரிந்துரைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வாயிலாக பொது சுகாதாரம் மீதான விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பணியை இந்த செல்பாக் அமைப்பு மேற்கொள்ளும் என்று அதன் புரவலருமான அமிருடின் கூறினார்.

இந்த செல்பாக் அமைப்பில் மாநிலத் தலைவர்கள், முதன்மை அமலாக்க நிறுவனங்கள், மாநில சுகாதார இலாகா பிரதிநிதிகள், மருத்துவ நிபுணர்கள் கல்வி மான்கள் உள்பட 15 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.