ஷா ஆலம், ஜூன் 7: சிஜில் பெலஜாரன் மலேசியா (SPM) 2021 தேர்வு முடிவுகள் ஜூன் 16 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி அறிவிக்கப்படும் என்று மலேசிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சின் கூற்றுப்படி, தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் முடிவுகளைப் பெறலாம், அதே நேரத்தில் தனியார் மாணவர்களுக்கான தேர்வு முடிவு சீட்டுகள் அதே தேதியில் தபால் மூலம் அனுப்பப்படும்.
“மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் மாணவர்களும் இரண்டு முறைகள் மூலம் முடிவுகளை மதிப்பாய்வு செய்யலாம், முதலாவது ஆன்லைனில் myresultspm.moe.gov.my என்ற இணைப்பில் ஜூன் 16 காலை 10 மணி முதல் ஜூன் 24 மாலை 6 மணி வரை முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
“அது தவிர, மாணவர்கள் SPMNoKPAngkaGiliran என டைப் செய்து 15888க்கு அனுப்புவதன் மூலம் SPM 2021 தேர்வின் முடிவுகளை SMS மூலமாகவும் பெறலாம்.
"இந்த அமைப்பு ஜூன் 16, 2022 அன்று காலை 10 மணி முதல் ஜூன் 22, 2022 அன்று மாலை 6 மணி வரை செயல்படுத்தப்படும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2 முதல் 29 வரை நடைபெற்ற SPM 2021 தேர்வில் மொத்தம் 407,097 பேர் தேர்வு எழுதினர்.


