ஷா ஆலம், ஜூன் 7: ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) ஜூன் 15 முதல் விஸ்தா ஆலம், செக்சென் 14ஐ பிளாஸ்டிக் இல்லாத ஒரு முன்னோடியாக பகுதியாக மாற்றியுள்ளது.
இதன் மூலம், அங்கு வசிப்பவர்களும், வியாபாரிகளும், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது, பிளாஸ்டிக் உணவு மற்றும் பானங்கள் கொள்கலன்கள் அல்லது பிளாஸ்டிக் உபயோகப்படுத்தும் கருவிகளை பயன்படுத்தக்கூடாது.
அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர், வணிக வளாகங்கள் பொதுமக்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகள், காகிதப் பைகள் அல்லது எளிதாக அகற்றக் கூடிய பைகளை வழங்க வேண்டும் என்றார்.
"பொதுமக்கள் ஷாப்பிங் செய்யும்போது வீட்டிலிருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை கொண்டு வரவும், தங்கள் சொந்த கொள்கலன்கள் மற்றும் உணவு மற்றும் பான பாத்திரங்களை கொண்டு வரவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்" என்று ஷாரின் அகமது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மலேசியா மற்றும் ஜெர்மனியின் ஒத்துழைப்பின் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுப்பதற்கான கூட்டு நடவடிக்கை திட்டத்தின் கீழ் விஸ்தா ஆலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.
ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் குறித்து சமூகத்தை அறிந்துகொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த திட்டம் ஒரு தளமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
"எம்பிஎஸ்ஏ இந்த திட்டம் ஷா ஆலத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கு ஒரு முன்னோடி திட்டமாக இருக்கும் என்று நம்புகிறது, இது ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது" என்று ஷாரின் கூறினார்.


