ECONOMY

செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்  புற்றுநோயால் அவதிப்படும் முதியவருக்கு உதவி.

7 ஜூன் 2022, 3:11 AM
செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்  புற்றுநோயால் அவதிப்படும் முதியவருக்கு உதவி.

செந்தோசா, ஜூன் 7 - செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர்  மந்திரி புசாரின் இந்தியச் சமூகத்திற்கான சிறப்பு பிரதிநிதியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் புற்றுநோயால் அவதிப்படும் ஒரு முதியவர் சுயமாகத் தனது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளத் தேவையான உதவி பொருட்களை வழங்கினார்.

திருமணமாகாத தனது  மகளின் கவனிப்பில் உள்ள அவர் கடுமையான நோய் சிகிச்சைக்குப் பின்பும், தனது மகளுக்கு அதிகப் பாரமாக இருக்கக் கூடாது என விரும்புகிறார் 73 வயதான லெட்சுமி மாணிக்கம்.

புற்றுநோய்கான தனது மருத்துவ மற்றும் அறுவைச் சிகிச்சை நடைமுறைகளை முடித்து வீடு திரும்பிய அவர் . அவர் தனது திருமணமாகாத மகளுடன் வசிக்கிறார் -  தனது தாயைக் கவனித்துக் கொள்ள மகள் விரும்புகிறார்.

ஆனால், அவர் வேலைச் செய்து தன் தாயை மற்றும்  தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய  பொருளாதார  இக்கட்டில் இருக்கிறார்.

தான் வேலைக்குச் சென்ற பின்  அவரது தாய் சுயமாகத் தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டிய ஒரு சூழலை எதிர் கொண்டுள்ளதுடன்,   மகளின் சிறிய வருமானத்தில் அவர்களின் தேவைகளின் செலவையும் தாயாரின் மருத்துவ உதவி பொருள்களுக்கான செலவையும் தாங்க முடியாத சுழலை அறிந்து செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதவி கரம் நீட்டினார்,

அடிப்படைத் தேவைகளுக்கான நன்கொடைகள், வழங்கியதுடன், நடப்பதை எளிதாக்க  ஊன்று கோல்கள்  மற்றும்  வீட்டில் அவரின் நடமாட்டத்திற்கும், மருத்துவமனை  செல்வதற்கும் தேவைப்படும்  சக்கர நாற்காலிகளை  வழங்கி  டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்  முதியவர்  லெட்சுமி மாணிக்கத்திற்கு உதவினார்.

இவ்வேளையில்  இக்கட்டான வாழ்க்கை சூழலில்  உள்ள முதியவருக்கு அவரின் வீட்டின் அருகில் உள்ள அண்டை வீட்டாரையும் நேரம் கிடைக்கும்போது  உதவும் படி குணராஜ் கேட்டுக்கொண்டார்.

இது மனிதாபிமான உன்னதச் செயல் என்றும்,  கடவுளின் நல்லவருள் கிட்ட இது போன்ற  சேவைகளை  நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.