ECONOMY

மாநில வேலை வாய்ப்பு திட்டத்தில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை கிடைக்க உதவியது

5 ஜூன் 2022, 6:27 AM
மாநில வேலை வாய்ப்பு திட்டத்தில் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை கிடைக்க உதவியது

கோம்பாக், ஜூன் 5: பிப்ரவரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலிருந்து 500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு திட்ட பங்கேற்பாளர்கள் பணிக்கு ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் வேலை வாய்ப்பு திட்ட பிரிவின் (UPPS) தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ் விஜயன் தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில் பணிபுரிய ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணிக்கை முந்தைய ஆறு தொடர் சுற்றுப்பயணங்கள் அடிப்படையில் இருந்ததாகவும், இரண்டாவது அமர்வு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

"இத்திட்டத்தின் வரவேற்ப்பு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது, மேலும் பணியாளர் அதிகாரமளித்தல் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதிராவும் சிலாங்கூர் மக்களுக்கு முடிந்தவரை வேலைகளைப் பெற உதவ விரும்புகிறார்.

“இன்று பிற்பகல் 3 மணி வரை, 50 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர். அவர்களில் பாதி பேர் இரண்டாவது நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர், ”என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 26 முதல் ஜூன் 25 வரை ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற மாநில வேலை வாய்ப்பு திட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 உள்ளூர் நிறுவனங்கள் இணைந்து சுமார் 3,000 வேலை வாய்ப்புகளை வழங்கின.

ஆர்வமுள்ள நபர்கள் https://uppselangor.wixsite.com/my-site என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம்.

வேலை வாய்ப்பு திட்டத்தின் இடம் மற்றும் அடுத்த தேதி கீழ்வருமாறு:

  • டேவான் டத்தோ ஹொர்மாட் தஞ்சோங் காராங் (ஜூன் 11 மற்றும் 12)
  • டேவான் பந்திங் பாரு, கோலா லங்காட் (ஜூன் 18)
  • ஸ்ரீ பெர்ணாம் ஹால், சபாக் பெர்ணாம் (ஜூன் 25)

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.