ECONOMY

பூலாவ் இண்டா கடல் பகுதியில் அடையாளம் தெரியாத இரு ஆடவர்களின் உடல்கள் மீட்பு

3 ஜூன் 2022, 8:58 AM
பூலாவ் இண்டா கடல் பகுதியில் அடையாளம் தெரியாத இரு ஆடவர்களின் உடல்கள் மீட்பு

ஷா ஆலம், ஜூன் 3- புலாவ் இண்டா,  மெரினா படகுத் துறை பகுதியில்  அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் உடல்கள் மிதந்து வரக் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் சிலாங்கூர் மாநில கடல்சார் அமலாக்க நிறுவனத்திற்கு (ஏ.பி.எம்.எம்.)  நேற்று மாலை 4.26 மணியளவில்  மீனவர்களிடமிருந்து தகவல் கிடைக்கப்பெற்றதாக  அதன் இயக்குநர் கேப்டன் வி.சிவகுமார் கூறினார்

இதனைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக பெர்காசா 36 எனும் படகு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

மாலை 4.45 மணியளவில் அந்த படகு சம்பவ இடத்தை அடைந்த போது இரு ஆடவர்களின் உடல்கள் கடலில் மிதக்கக் காணப்பட்டது. ஒருவரின் உடல்  முழு உடையிலும் மற்றொருவரின் உடல் கால் சட்டை மட்டும் அணிந்த நிலையிலும் இருந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டு உடல்களும்  மெரினா படகுத் துறைக்கு  எடுத்துச் செல்லப்பட்டு மேல் கட்ட  விசாரணைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள்  அல்லது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள்  சிலாங்கூர் மாநில ஏ.பி.எம்.எம். அமைப்பை 03-21760627 என்ற எண்ணில் தொடர்பு  தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.