ECONOMY

மக்காச்சோளம் பயிரிடும் திட்டங்கள் மூன்று விழுக்காடு வரை இறக்குமதி விநியோகம்  குறைவு

27 மே 2022, 10:09 AM
மக்காச்சோளம் பயிரிடும் திட்டங்கள் மூன்று விழுக்காடு வரை இறக்குமதி விநியோகம்  குறைவு

ஷா ஆலம், மே 27 - இங்கு அருகிலுள்ள கோலா லங்காட் செலாத்தானில் தானிய மக்காச்சோளம் நடவுத் திட்டம் மற்றும் நெகிரி செம்பிலானின் கிமாசில்  மேற்கொள்ள படும் RM30 லட்சம் செலவிலான திட்டத்தின் வழி , இறக்குமதி விநியோகத்தை இரண்டு முதல் மூன்று விழுக்காடு வரை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) மற்றும் மந்திரி புசார் நெகிரி செம்பிலான் இணைப்பு அல்லது எம்பிஐஎன்எஸ் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுத் திட்டம், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தூய்மைப்படுத்தும் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டவுடன் தொடங்கப ்படவுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“283.2 ஹெக்டேர் நிலப்பரப்பில் இத்திட்டம் வெளிநாட்டிலிருந்து கால்நடைத் தீவனப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியதன் காரணமாக அதிகரித்து வரும் கோழித் தீவன விலைக்கு ஒரு விரிவான தீர்வுக்கான உறுதிப்பாட்டின் அடையாளமாகும்.

"அமெரிக்காவின் குறிப்புகளின் அடிப்படையில், இந்தப் பயிர் ஆண்டுக்கு மூன்று முறை விளைவிக்க கூடியது, ஒவ்வொரு சுற்றுக்கும் 100 நாட்கள் ஆகும்" என்று மே 18 அன்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது, ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான முயற்சி என்றும் அவர் விவரித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.