ALAM SEKITAR & CUACA

தரிசு நிலத்தில் விவசாய தொழில்

27 மே 2022, 9:59 AM
தரிசு நிலத்தில் விவசாய தொழில்

ஷா ஆலம், மே 27 - போதுமான உணவு விநியோகத்தை உறுதி செய்வதற்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மாநிலம் முழுவதும் வெறுமையான நிலம் விவசாயத் தளமாகப் பயன்படுத்தப்படும்.

புக்கிட் சீடிங், கோலா லங்காட்டில் 30 ஏக்கர் நிலம், காய்கறிகள், மிளகாய் மற்றும் தேங்காய் போன்ற பணப்பயிர்களுக்கான இடமாக  பல பகுதிகள் விவசாயத்திற்கு ஏற்றதாக கண்டறியப்பட்டுள்ளதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“இது கடந்த ஆண்டு முதல் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தால் (பிகேபிஎஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

"உண்மையில், ஏற்பாடு செய்யப்பட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் 1,000 முதல் 2,000 ஏக்கர் வரை பயனற்ற நிலங்களைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்று மே 20 அன்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு (2021-2025) விவசாயத் துறையின் மேம்பாட்டிற்காக மாநில அரசு RM6.7 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

விவசாயப் பகுதிகளை அதிகரிப்பது, உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரிப்பது, பிகேபிஎஸ்ஸை வலுப்படுத்துவது, விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையை அதிகரிப்பது மற்றும் நவீன விவசாய முறைகளை செயல்படுத்துவது ஆகியவைகள் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.

இறக்குமதி உணவு பொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதைத் தவிர, எதிர்காலத்தில் நாட்டின் உணவு சேமிப்பு மையமாக மாறுவதற்கான சிலாங்கூரின் இலக்குடன் இந்த முயற்சி அமைந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.