ALAM SEKITAR & CUACA

20,000 மீன்கள் குளத்தில் விடப்பட்டு, இயற்கை சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

25 மே 2022, 11:03 AM
20,000 மீன்கள் குளத்தில் விடப்பட்டு, இயற்கை சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஷா ஆலம், மே 25: சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கும் முயற்சியாக சமீபத்தில் பூச்சோங்கில் உள்ள தாமான் ரெக்ரியாசி வாரிசன் குளத்தில் மொத்தம் 20,000 ஆற்று மீன்கள் விடப்பட்டன.

இறக்குமதி செய்யப்படும் மீன்கள் அல்லது நீர்வாழ் உயிரினங்களுக்கு சேதம் விளைவிக்கும் பிற விலங்குகளுக்கு மாறாக நாட்டு மீன்களை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு உணர்த்துவதே தொடக்க நிகழ்ச்சி என ஊராச்சி மன்ற அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

"பூங்காவில் மீன்களை விடுவிப்பது பொருத்தமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இந்த இடம் சமூக நடவடிக்கைகளுக்கான மையமாக உள்ளது மற்றும் உள்ளூர் மக்களால் அடிக்கடி விஜயம்  செய்யப்படுகிறது.

"விளையாட்டு அல்லது ஓய்வுக்காக வரும் குடியிருப்பாளர்களை சுற்றுச்சூழலை காக்கவும் சுற்றுச்சூழலின் தரத்தைப் பாதுகாக்க பொறுப்புடன் இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று இங் ஸீ ஹான் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இம்முயற்சி மேலும் விரிவடைந்து சுற்றுச்சூழலை வலுப்படுத்த அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற வேண்டும் என கின்ராரா மாநில சட்டமன்ற உறுப்பினர் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.