கோலாலம்பூர், மே 24- தலைநகரில் மோசமடைந்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழி முறை தொடர்பில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டி.பி.கே.எல்.) விரிவான ஆய்வை நடத்தவுள்ளது.
போக்குரத்துக்கு இடையூறாக இருக்கும் சாலை சமிக்ஞை விளக்கு மற்றும் கார் நிறுத்துமிட முறையை ஒருங்கிணைப்பது ஆகிய அம்சங்கள் மீது இந்த ஆய்வு கவனம் செலுத்தும் என்று கூட்டரசு பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் கூறினார்.
தலைநகரில் சாலை சமிக்ஞை முறையை தற்போது இரு நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன. நகருக்கு வரும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் எந்த இடையூறுமின்றி சீரான பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அவ்விரு நிறுவனங்களும் சிறப்பான ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின் முடிவுகள் அடங்கிய அறிக்கை கூட்டரசு பிரதேச அமைச்சின் அமைச்சரவைக்கு பிந்தைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் போக்குவரத்தை கண்காணிக்கும் மற்றும் நிர்வகிக்கும் பணியை கோலாலம்பூர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர் மேற்கொண்டு வருகிறது. முன்பு இது ஒருங்கிணைந்த போக்குவரத்து நிர்வாக மையம் (ஐ.டி.ஐ.எஸ்.) என அழைக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
மாநகருக்குள் நுழையும் கனரக வாகனங்கள், அனுமதிக்கப்படாத இடங்களில் வணிகம் செய்யும் வியாபாரிகள், வாகனமேட்டிகளின் பொறுப்பற்ற போக்கு ஆகியவையும் அந்த ஆய்வில் இடம் பெற்றிருக்கும் என்றார் அவர்.
இந்த முயற்சிகள் வாயிலாக மாநகரில் 100 விழுக்காடு போக்குவரத்து நெரிசலை கட்டு


