ECONOMY

மலை ஏறி மரணமடைந்த இரண்டு பெண்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது - காவல்துறை

24 மே 2022, 6:30 AM
மலை ஏறி மரணமடைந்த இரண்டு பெண்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது - காவல்துறை

ஈப்போ, 24 மே: மே 15 அன்று இங்குள்ள சிம்பாங் பூலாயில் உள்ள கூனோங் சுக்கு மலை ஏறும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பெண் மலை ஏறிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மே 16 அன்று கண்டெடுக்கப்பட்ட உடல் உறுப்புகள் 32 வயதான சீ சூ யென் என்பவருடையது என்றும், கடந்த சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது உடல் இங் யீ செவ் (46) என்பவருடையது என்றும் பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் கூறினார்.

“பாதிக்கப்பட்ட இருவரின் அடையாளங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன, இன்று காலைப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. முடிவுகள் (பிரேதப் பரிசோதனை) வெளிவந்த பிறகு, சமீபத்திய தகவலைப் பகிர்ந்து கொள்வோம்.

2022 ஆம் ஆண்டு 215 வது போலிஸ் தினத்துடன் இணைந்து இன்று விமானப்படை பயிற்சித் தளப் பல்நோக்கு மண்டபத்தில் இரத்தத் தானம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்திய பின்னர்ச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இரண்டு மலை ஏறுபவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரால் உரிமை கோரப்படவில்லை" என்று கூறினார்.

மே 16 அன்று, தேடல் மற்றும் மீட்பு (SAR) குழு இரண்டு பெண் ஏறுபவர்களில் ஒருவருக்குச் சொந்தமானது என்று நம்பப்படும் மனித உறுப்புகளின் பாகங்கள் மற்றும் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

மே 15 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் நடந்த சம்பவத்தில் சிராஸ், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் கிள்ளான் ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு பெண்களும் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.