ECONOMY

சிலாங்கூர் ஐடில்பித்ரி திறந்த இல்லம் இன்று கிள்ளான் பெட்டாலிங்கில் நிறைவடைகிறது.

21 மே 2022, 4:50 AM
சிலாங்கூர் ஐடில்பித்ரி திறந்த இல்லம் இன்று கிள்ளான் பெட்டாலிங்கில் நிறைவடைகிறது.

ஷா ஆலம், மே 21: இன்று பெட்டாலிங் மற்றும் கிள்ளானில் சிலாங்கூர் ஐடில்பித்ரி ஓபன் ஹவுஸ் கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்தப் பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

பெட்டாலிங்கில் உள்ள திறந்த இல்ல உபசரிப்பு MBSJ Puchong Indah  திறந்த மைதானத்தில் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.

கிள்ளானில் மாலை 8 மணி முதல் 11 மணி வரை பண்டமாரான் விளையாட்டு வளாகச் சதுக்கத்தில் நடக்கும்.

டத்தோ மந்திரி புசார்  டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அவரது மனைவி டத்தின் ஶ்ரீ மஸ்தியானா முஹம்மது ஆகியோரும் குழந்தைகளுக்கான டூயட் ராயா வழங்கி  விழாவைச் சிறப்பிக்கவுள்ளார்.

கோவிட் -19 காரணமாக ரத்து செய்யப்பட்ட உபசரிப்புகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மே 21 வரை ஒன்பது மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு அரசு திறந்த இல்ல உபசரிப்புகள் நடத்தப்படுகின்றன.

மே 15 அன்று உலு சிலாங்கூர் மாவட்டப் பல்நோக்கு அரங்கம் மற்றும் விளையாட்டு வளாகத்தில் நடந்த மூன்று மணி நேர நிகழ்ச்சியில் 5,000 பேர் கலந்து கொண்டனர்.

ஒரு நாள் கழித்து, கோம்பாக்கின் தாமன் மெலாவத்தி ரம்ஜான் சந்தை தளத்தில் நடந்த அதே விழாவில் சுமார் 10,000 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

மே 17 அன்று, பண்டார் பாரு பாங்கி சமூக வணிகத் தளம்,  உலு லங்காட் மற்றும் பிபிஎஸ்டி நடை, பண்டார் பாரு சாலாத் திங்கி, மே 18 அன்று சிப்பாங்கில் இதே நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பல இன விருந்தினர்கள் கலந்து கொண்ட திறந்த இல்ல விழா மே 19 அன்று ஜுக்ரா ஸ்டேடியம் மைதானத்தில் பந்திங், பண்டார் மெலாவத்தி கோலா சிலாங்கூர் பேருந்து முனையம் மற்றும் நேற்று சபாக் பெர்ணாம் சுங்கை புசார் ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெற்றது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.