ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் மூன்று ஆண்டுகளில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கத் திட்டமிட்டுள்ளது

21 மே 2022, 4:48 AM
சிலாங்கூர் மூன்று ஆண்டுகளில் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கத் திட்டமிட்டுள்ளது

ஷா ஆலம், மே 21: சிலாங்கூர் அரசாங்கம் 2025ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களிலும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கத் திட்டமிட்டுள்ளது.

எவ்வாறாயினும்,  பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக வேறு பொருத்தமான முறைகள் உள்ளதா என்பதைப் பொறுத்து இந்த முயற்சி இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

“2025 ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை ஒழித்து, மறுசுழற்சி செய்யப்பட்ட பைகள் அல்லது காகிதம் போன்ற பிற பொருத்தமான பொருட்களைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் முன்மொழிகிறோம்.

"பிளாஸ்டிக் பை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் சமூகத்திற்கு தொடர்ந்து ஏற்பாடு செய்ய உள்ளூர் அதிகாரிகளை (பிபிடி) நாங்கள் ஊக்குவிக்கிறோம்," என்று ஹீ லாய் சியான் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

8 மே 2021 அன்று காஜாங்கில் உள்ள சௌஜானா இம்பியான் டேவான் செம்பகாவில் கோவிட்-19 சமூகப் பரிசோதனையின் போது மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லாய் சியான் ஊடகங்களிடம் இதனைக் கூறினார்.

அதே நேரத்தில் பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கவும், பணத்தைச் சேமிக்கவும், சுற்றுச்சூழலை எப்போதும் கவனித்துக்கொள்வதை உறுதி செய்வதற்காக ஷாப்பிங் செய்யும்போது பொதுமக்கள் தங்கள் சொந்தப் பைகளைக் கொண்டு வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

"ஷாப்பிங் செய்யும்போது, ஒரு பிளாஸ்டிக்கிற்கு 20 சென் செலுத்த வேண்டும். அதிகப் பொருட்களை வாங்கினால், அதிகப் பிளாஸ்டிக் பைகள் தேவைப்படும், அதிகக் கட்டணம் செலுத்துவதை விட, பொருட்கள் எடுத்துச் செல்லச் சொந்தமாகப் பாத்திரங்களை எடுத்து வருவது சிறந்தது,  சிக்கனமானது என்பதால், ஷாப்பிங் செய்யும் போது இவ்வாறு செய்யுமாறு மக்களை நாங்கள் வலுவாக ஊக்குவிக்கிறோம், என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று  தொடங்கப்பட்ட பிரச்சாரம் அதன் இலக்கை அடையத் தவறினால், சிலாங்கூரில் அமல்படுத்தப்பட்ட 20 சென் பிளாஸ்டிக் பைக் கட்டண விகிதம் அதிகரிக்கப்படும் என்று லோய் சியான் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை,  கட்டணக் கொள்கையை மாற்றுவதற்கு முன் அவரது தரப்பு ஒவ்வொரு ஆண்டும் வசூல் தொகையை மதிப்பாய்வு செய்யும்.

ஜனவரி 2017 முதல், சிலாங்கூரில் வணிகர்கள் இலவசப் பிளாஸ்டிக் பைகளை வழங்குவதில்லை மேலும் அனைத்து வளாகங்களிலும் உணவுப் பாத்திரங்கள் மற்றும் பாலிஸ்டிரீன் உபகரணங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.