ECONOMY

ஹரி ராயா திறந்த இல்லம் பிடித்த உணவைச் சுவைக்க மக்கள் கூடும் இடமாகியது.

21 மே 2022, 4:44 AM
ஹரி ராயா திறந்த இல்லம் பிடித்த உணவைச் சுவைக்க மக்கள் கூடும் இடமாகியது.
ஹரி ராயா திறந்த இல்லம் பிடித்த உணவைச் சுவைக்க மக்கள் கூடும் இடமாகியது.
ஹரி ராயா திறந்த இல்லம் பிடித்த உணவைச் சுவைக்க மக்கள் கூடும் இடமாகியது.

கோலா சிலாங்கூர், 21 மே: சிலாங்கூர் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு  திட்டம் மாநிலத்தில் பல இனச் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கான சிறந்த தளமாகும்.

துரைராஜ், 43, என்ற விருந்தினர், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பல இனத்தவர்களுடன் திருவிழாவைச் சந்தித்துக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் நிகழ்வு அங்கு வாழ்பவர்கள் ஒவ்வொரு ஈத் பண்டிகைக்கும் விருப்பமான உணவைச்  சுவைக்க வாய்ப்பளிக்கிறது.

[caption id="attachment_464956" align="alignright" width="255"] துரைராஜ், 43[/caption]

"இந்தத் திட்டத்தில் நான் திருப்தி அடைகிறேன், ஏனெனில் இது மற்ற இனங்களைச் சேர்ந்த நண்பர்களுடன் கூடி பழகுவதை தவிர, பலவிதமான உணவுகளை ருசித்து மகிழ்வது மனதுக்கு இன்பமானது என்றார் அவர்.

“நான் வந்தவுடனே, எனக்குப் பிடித்த மெனு என்பதால், உடனே சாத்தேயைத் தேடினேன். அதிர்ஷ்டவசமாக, அதிக எண்ணிக்கையிலான உணவு பிரியர்கள் அங்குக் குழுமி இருந்ததால், ஒரு நபருக்கு நான்கு குச்சிகள் மட்டுமே கிடைத்தன , ”என்று அவர் நேற்று பண்டார் மெலாவத்தி பேருந்து முனையத்தில் சந்தித்தபோது கூறினார்.

பகுதி நேரக் கிராஃப் டிசைனர் டான் காங் வெயிட், 31, வார நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் வருகை தந்ததைக் கண்டு உற்சாகமடைந்தார்.

[caption id="attachment_464957" align="alignleft" width="270"] டான் காங் வெயிட், 31[/caption]

“நட்பை வலுப்படுத்தவும், இனங்களுக்கிடையில் ஒற்றுமை உணர்வை வளர்க்கவும் முடியும் என்பதால், இதுபோன்ற ஒரு விழாவுக்காக நான் நீண்ட காலமாகக் காத்திருக்கிறேன்.

“வேலை நாட்களிலாக இருந்த போதும் பலர் கலந்து கொண்டார்கள்,  அதனை  இரவில் செய்திருந்தால் இன்னும் அதிக விறுவிறுப்பாக இருக்கும், ”என்று அவர் கூறினார்.

41 வயதான நூருல் என்று அறியப்பட விரும்பும் மற்றொரு விருந்தினர், கோவிட்-19 தொற்றுநோய் சகாப்தத்திற்கு பின்பு வழக்கம் போல் திறந்த இல்லத்தின் உற்சாகத்தை அனுபவிக்கும் வாய்ப்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தார்.

"தற்செயலாக, நிகழ்வைக் கலகலப்பூட்டுவதற்காக அனைத்து ஊழியர்களுக்கும் இங்கு வருவதற்கு முதலாளி அனுமதி அளித்தார், எனவே நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டேன் என்றார்.

பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்து ஒன்றாக உணவு உண்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் அவர்.

ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய திறந்த இல்ல உபசரிப்பு மே 15 அன்று உலு சிலாங்கூரில் ஆரம்பித்து இன்று பெட்டாலிங் மற்றும் கிள்ளானில் நிறைவடைகிறது .

பெட்டாலிங் மாவட்டத் திறந்த இல்ல உபசரிப்பு எம்.பி.எஸ்.ஏ பூச்சோங் இண்டா (MBSJ Puchong Indah) பொது மைதானத்தில் மதியம் 2.30 முதல் 5.30 வரையிலும், கிள்ளான் இரவு 8 முதல் 11 வரை பண்டமாரன் விளையாட்டு வளாகச் சதுக்கத்திலும் நடைபெறுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.