ECONOMY

இவ்வாண்டில்  பி.கே.என்.எஸ். லாபத்தை வெ. 30 கோடியாக உயர்த்த சிலாங்கூர் இலக்கு

20 மே 2022, 3:32 AM
இவ்வாண்டில்  பி.கே.என்.எஸ். லாபத்தை வெ. 30 கோடியாக உயர்த்த சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம், மே 20- சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.)  இவ்வாண்டு 30 கோடி வெள்ளி லாபம் ஈட்ட சிலாங்கூர் சிலாங்கூர் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

அக்கழகத்தின் துணை நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கை, கட்டுமானத் தொழில் துறையில் காணப்படும் நேர்மறையான மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 2020 இல் பி.கே.என்.எஸ். 50 கோடி வெள்ளி இழப்பை எதிர்நோக்கியது. எனினும், கடந்தாண்டில் அது 4 கோடி வெள்ளி லாபத்தை பதிவு செய்தது. பி.கே.என்.எஸ். இன்னும் வலுவாக இருப்பதற்கு இதுவே தக்க சான்றாகும் என்றார் அவர்.

நாம் அமல்படுத்திய நீண்டகால, குறுகிய கால திட்டங்கள் நல்ல பலனைத் தந்துள்ளதை இந்த லாபம் காட்டுகிறது.

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து பணப்புழக்கமும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2020 இல் நமது நிதி நிலை எதிர்மறையான மதிப்பை பதிவு செய்தது. இருந்த போதிலும் பி.கே.என்.எஸ். லாபத்தை ஈட்டியுள்து. அக்கழகம் தொடர்ந்து ஆக்ககரமான முறையில் செயல்படுவதை இது காட்டுகிறது என்றார் அவர்.

பி.கே.என்.எஸ். ஏற்பாட்டில் இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐம்பதாண்டு நிறைவை எட்டும் இந்த கழகம், கால மாறுதலுக்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.