ANTARABANGSA

 சீ போட்டியின் பத்தாவது நாளில் நாட்டிற்கு மேலும் 4 தங்கப்பதக்கங்கள்

18 மே 2022, 7:57 AM
 சீ போட்டியின் பத்தாவது நாளில் நாட்டிற்கு மேலும் 4 தங்கப்பதக்கங்கள்

ஹனோய், மே 18: இங்கு நடைபெறும் 31வது சீ போட்டியின் பத்தாவது நாளான நேற்று தடகளம், மவுண்டன் பைக்கிங், ஸ்னுக்கர் ஆகிய போட்டிகளில் மலேசியா நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற்றது.

எனினும் இந்த தங்கப் பதக்க எண்ணிக்கை உயர்வு நாட்டின் பதக்க பட்டியலில்  எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. மலேசியா 23 தங்கம் 26 வெள்ளி மற்றும் 55 வெண்கலப் பதக்கங்களுடன் தொடர்ந்து 6 வது இடத்தில் இருந்து வருகிறது.

தட்டு எறிதல் போட்டியில் மலேசிய அணியினர் நேற்று இரு தங்கப்பதக்கங்களை வென்றனர். ஸ்னுக்கர் போட்டியில் லிம் கோக் லியோங் தங்கம் வென்றார்.

நீச்சல் போட்டியில் மலேசிய அணியினர் ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களுடன் அப்போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தனர். இப்போட்டியில் நமது நாட்டு வீரர்கள் தேசிய சாதனையை முறியடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.