ECONOMY

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு செந்தோசா தொகுதியில் மருத்துவ முகாம்- 1,500 பேர் பங்கேற்றனர்

17 மே 2022, 2:42 AM
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு செந்தோசா தொகுதியில் மருத்துவ முகாம்- 1,500 பேர் பங்கேற்றனர்

கிள்ளான், மே 17-  சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு செந்தோசா தொகுதியின் ஏற்பாட்டில் "சித்திரை முத்துகள்" எனும் நிகழ்வு தாமான் செந்தோசா ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயத்தில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக இடம் பெற்ற இலவச மருத்துவ முகாமில் தொகுதியிலுள்ள சுமார் 1,500 பங்கு கொண்டு பயனடைந்தனர்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.

செந்தோசா வட்டாரத்திலுள்ள சில மருத்துவர்களின் உதவியுடன் இந்த மருத்துவ முகாமை தாங்கள் நடத்தியதாகக் கூறிய அவர்,  கண் பரிசோதனையும் பார்வை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நடத்தப்பட்டது என்றார்.

நேற்று மாலை 4.00 மணி முதல் இரவு  11.00 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறார்களுக்கான போட்டிகளும் கலைநிகழ்ச்சியும் சிறப்பு அங்கமாக இடம் பெற்றன என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக எந்த நிகழ்வும் நடத்தப்படாமலிருந்த நிலையில் இவ்வாண்டு பொது மக்களின் நேரடி பங்கேற்புடன் இந்நிகழ்வு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.