ECONOMY

விபத்தில் பலியான மாணவரின் குடும்பத்தை மந்திரி புசார் சந்தித்தார்

16 மே 2022, 4:22 AM
விபத்தில் பலியான மாணவரின் குடும்பத்தை மந்திரி புசார் சந்தித்தார்

உலு சிலாங்கூர், மே 16 -  வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் கோல கங்சாரில்  கடந்த 4 பேரின் விபத்தில் உயிரிழந்த  சுல்தான் அஸ்லான் ஷா பல்கலைக்கழக  மாணவரின் குடும்பத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சந்தித்தார்.

முகமது நஸ்ருனின் பெற்றோர்களான ஐடோல் முனீர் அக்பர் அப்துல் அஜீஸ் மற்றும் மைசதுலகம் எம்.டி தாஹா ஆகியோரை கோல குபு பாருவில் அவர்களின் இல்லத்தில்  சந்தித்த அவர், அக்குடும்பத்திற்கு  நிதியுதவியும் வழங்கினார்.

குடும்பத்திற்குச் சொத்தாக இருக்கும் பிள்ளையின் மறைவிற்கு மாநில அரசின் சார்பில்  இரங்கல் தெரிவிக்கவே இங்கு வருகை மேற்கொண்டோம். அன்னாரின் மறைவுக்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம் என அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

கடந்த மே 11 ஆம் தேதி நிகழ்ந்த இவ்விபத்தில் முகமது நஸ்ருன் தவிர,

இக்பால் ஹஸ்னுன் ஹலிமி, (வயது 23), அகமது நைம் நஜ்மி அகமது ஹபிஸான்(வயது 21), முகமது நபில் ஹைகல் முகமது ஃபரிஸ் (வயது 19) மற்றும் அகமது அக்மல் அகமது மொக்லிஸ் (வயது 20) ஆகியோரும் பலியாகினர்.

வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் வடக்கு தடத்தின் 245.2  கிலோ மீட்டரில் நிகழ்ந்த  இரண்டு டிரெய்லர்கள் மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட விபத்தில் அந்த காரில் பயணித்த  ஐந்து மாணவர்களும்  இறந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.