மே 15- சிலாங்கூர் மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு உலு சிலாங்கூர், மாவட்டத்தில் இன்று தொடங்கியது.கோல குபு பாரு சமூக மற்றும் விளையாட்டு மையத்தில் பிற்பகல் 2.30 மணி தொடங்கி மூன்று மணி நேரத்திற்கு நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தன் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமதுவுடன் மாலை 4.15 மணியளவில் இந்நிகழ்வுக்கு வருகை புரிந்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கு மந்திரி புசார் பண அன்பளிப்பை வழங்கினார்.
இந்த விருந்து நிகழ்வில் பல்வேறு வகையான உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. முஸ்லீம்கள் மட்டுமின்றி பிற இனத்தினரும் இந்த விருந்து நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
ECONOMY
உலு சிலாங்கூர் நோன்புப் பெருநாள் உபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்
15 மே 2022, 11:35 AM


