ACTIVITIES AND ADS

அனிஸ் உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மே 17 முதல் வரவேற்கப்படுகின்றன

15 மே 2022, 11:24 AM
அனிஸ் உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மே 17 முதல் வரவேற்கப்படுகின்றன

ஷா ஆலம், 15 மே-  இவ்வாண்டிற்கான சிலாங்கூர் பிரத்தியேகக் பிள்ளைகளின் (அனிஸ்) சிறப்பு உதவிக்கான விண்ணப்பங்கள் மே  மாதம் 17 ஆம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன.

இந்த பதிவு நடவடிக்கை வரும் மே மாதம் 31 ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்றும் www.anisselangor.com/bantuananis என்ற அகப்பக்கம் வாயிலாக மேல் விபரங்களை அறிந்து கொள்ளலாம்  என்றும் அனிஸ் தனது முகநூல் வழி தெரிவித்தது.

பதினெட்டு  மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய பிரத்தியேகக் குழந்தைகளைக் கொண்ட, மாதம் 5,000 வெள்ளிக்கும் கீழ் வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத் திறனாளி பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களின் சிகிச்சை, கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளை குறைப்பதை இந்த அனிஸ் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாற்றுத் திறனாளி பிள்ளைகளின் மீட்சி சிகிச்சைக்கு தேவைப்படும் உபகரணங்களை வாங்குவதற்கு உண்டாகும் செலவுகளையும் இத்திட்டத்தின் மூலம் குறைக்க இயலும்.

இந்த அனிஸ் திட்டம் தொடர்பான மேல் விபரங்களைப் பெற 03-55453170 / 03-54818800 என்ற எண்களில் அழைக்கலாம்.

அனிஸ் சிறப்பு உதவிப் படிவத்தை அனுப்புவதற்கான வழி முறைகள் பின் வருமாறு-

1.  மேலே குறிப்பிடப்பட்ட அனிஸ் இணையதளத்தில் பி.டி.எஃப். வடிவத்தில்

விண்ணப்ப பாரத்தைப் பதிவிறக்கவும்

2. படிவத்தை  பேனா மூலம் பூர்த்தி செய்யவும்.

3. சிலாங்கூர் குழந்தைகள் பாரம்பரிய அறக்கட்டளை (YAWAS), Aras 5, Selangor State Youth & Sports Complex 4, Jalan Platinum 7/52, Persiaran Kayangan, Seksyen 7, 40000 ஷா ஆலம், சிலாங்கூர் என்ற முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் படிவத்தை அனுப்பவும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.