ECONOMY

இலவச சுகாதார பரிசோதனை மூலம் 39,000 குடியிருப்பாளர்கள் பயனடைவர்

14 மே 2022, 8:24 AM
இலவச சுகாதார பரிசோதனை மூலம் 39,000 குடியிருப்பாளர்கள் பயனடைவர்

ஷா ஆலம், மே 14: இலவச சுகாதார பரிசோதனை சேவைகளை வழங்கும் சிலாங்கூர் சாரிங் (பரிசோதனை) திட்டத்திற்கு மே 16 முதல் செலாங்கா செயலியின் மூலம் பதிவு செய்யலாம்.

மாநிலத்தில் 39,000 குடியிருப்பாளர்கள் பயனடையும் இந்த முயற்சியில் இதயம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் போன்ற  தொற்றாத நோய்கள் பரிசோதனைகள்  அடங்கும் என பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

அவர் கருத்துப்படி, பெருங்குடல், புரோஸ்டேட், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகம் உள்ளிட்ட புற்றுநோய்களுக்கும், மங்கலான பார்வை, கிளௌகோமா மற்றும் விழித்திரை போன்ற கண் தொடர்பான நோய்களுக்கும் பரிசோதனை வழங்கப்படுகிறது.

"எனவே, அதிக எடை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற குடும்ப வரலாறு, ஆபத்துக் காரணிகளைக் கொண்ட சிலாங்கூர் குடியிருப்பாளர்கள், மருத்துவரால் கண்டறியப்படாத நோய் இருப்பதாக சந்தேகத்திற்கு உட்பட்டவர்கள்  சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பதிவு செய்யுமாறு மாநில அரசு அழைப்பு விடுக்கிறது" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சேவைக்கான பற்றுச் சீட்டுகளை பெறுவதற்கு முன் விண்ணப்பதாரர்கள் தங்கள் பின்னணி மற்றும் ஆபத்து காரணிகளை அடையாளம் காண பதிவு செய்யும் போது ஆரம்ப பரிசோதனை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று டாக்டர் சித்தி மரியா கூறினார்.

selangorsaring.selangkah.my என்ற இணைப்பின் மூலம் மேலும் தகவலைப் பெறலாம், Selcare 1-800-22-6600 அல்லது சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வலர்களை https://drsitimariah.com/talian-suka/ வழியாக அழைக்கவும்.

இம் மாநில மக்கள் நோய்களுக்கான சிகிச்சையை ஆரம்பத்திலிருந்தே அறிந்து சிகிச்சை பெறுவதற்கு உதவ  சிலாங்கூர் மாநில பட்ஜெட் 2022ல்,  RM34 லட்சம் ஒதுக்கியது,

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.