ECONOMY

கழிப்பறையில் சிசுவின் கரு - காதல் ஜோடியிடம் போலீஸ் விசாரணை

13 மே 2022, 4:01 AM
கழிப்பறையில் சிசுவின் கரு - காதல் ஜோடியிடம் போலீஸ் விசாரணை

கோலாலம்பூர்,மே 13; ஸ்தாபாக், டானாவ் கோத்தாவிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றின் கழிப்பறையில் சிசுவின் கரு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஒரு காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இருப்த்தேழு  வயதுடைய அந்த ஆடவரும் பெண்ணும் இங்குள்ள துங்கு அஜிசா மருத்துவமனை வளாகத்தில் நேற்று பின்னிரவு 12.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸ்ஹாரி அபு சமா கூறினார்.

கடுமையான இரத்தப் போக்கு காரணமாக சிகிச்சை பெற வந்த போது அப்பெண்ணும் ஆடவரும் கைது செய்யப்பட்டனர். பிரசவத்தை மறைத்தது மற்றும் குழந்தையின் உடலை சட்டவிரோதமான முறையில் வீசியது ஆகிய குற்றங்களின் பேரில் அவ்விருவரும் குற்றவியல் சட்டத்தின் 318 வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவர்கள் வங்சா மாஜூ போலீஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொள்ளும்படி அறிக்கை ஒன்றின் வாயிலாக அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.