ECONOMY

குமாஸ்தாவின் மேல்முறையீட்டு வழக்கு ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

11 மே 2022, 9:30 AM
குமாஸ்தாவின் மேல்முறையீட்டு வழக்கு ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

புத்ராஜெயா, மே 11 - மாற்றியமைக்கப்பட்ட சைக்கிள்களில் ‘basikal lajak’  விவகாரத்தில் எட்டுப் பதின்ம  இளைஞர்கள்  உயிரிழக்கக் காரணமான விபத்தில் , பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண் குமாஸ்தா வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு  எதிராகக் குமாஸ்தா சாம் கே டிங்கின் மேல்முறையீட்டிற்கான  வழக்கு மேலாண்மைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஜூன் 28 அன்று ஒத்திவைத்தது.

இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் முகமது கைரி ஹரோன் முன்னிலையில் வழக்கு நிர்வாகம் இடம் பெற்றதையடுத்து இந்தத் தேதி நிர்ணயிக்கப்பட்டது.

சாம் சார்பாக வழக்கறிஞர்கள் ஹர்விந்தர்ஜித் சிங் மற்றும் பைசல் மொக்தார் ஆகியோர் வழக்கு நிர்வாக நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர், அதே நேரத்தில் அரசுத் தரப்பில் துணை வழக்கறிஞர் இங் சியு வீ ஆஜரானார்.

முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் தலைமை ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளார் என்றும், சாமின் மேல்முறையீட்டில் அவர் (ஹர்விந்தர்ஜித்) இணை வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் துணைப் பதிவாளரிடம் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.